Tuesday, March 4, 2008

பொறந்த நாளு

பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து பாசக்கார மக்களுக்கும், அடுத்த பிறந்த நாளுக்கு முன்னதாகவே வாழ்த்துச்சொல்லப்போகும்(அதாவது இந்த பிறந்த நாளுக்கு தாமதமா) அனைவருக்கும் என் நன்றிகள், மேலும் இதுவரை பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொண்டடிய அனைவருக்கும் நான் சொல்லாமல் விட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையின் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மதுரை மாநகரமே ஜொலிக்கும் அளவுக்கு மின் விளக்குகளும் தோரணங்களும் கட்டப்பட்டன, டிட்ஜிடல்போர்டுகளால் மதுரையே ஸ்தம்பித்தது, அனைத்து மக்களுக்கும் இசையுடன் கூடிய விருந்து வழங்கப்பட்டது, 1008 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தப்பட்டது, ஊர்முழுவதும் காது கிளிய ஒ்லிப்பெருக்கியில் பாடல் ஒலிப்ரப்பப்பட்டது

இரவு நாயக்கர் மஹாலில் இசைப்புயலின் இசை விருந்து ஏற்ப்்பாடு செய்யப்பட்டுள்ளது. அ்தோடு சிறப்பு கவியரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

என்றெல்லாம் எழுத ஆசைதான் கொடுமைய என்ன செய்ய வழக்கத்த விட கொடுமையா இருந்துச்சு என் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஆணி, ஏற்கனவே நேத்து ராத்திரி மின்சாரம் (சம்சாரம் இல்லீங்கோ) இல்லாம கொசுத்தொல்லையால தூக்கம் கெட்டது, வழக்கமா அத சரிகட்ட அலுவலகம் வந்து ஒரு தூக்கம் போட்டுருவேன் பாவிப்பயலுக அதுலயும் ஒரு லோடு மண்ண அள்ளி தட்டிட்டானுக, சரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு வழக்கம்போல நானும் விட்டுட்டேன், ஆனா எனக்கு பொறந்த நாளுன்னுகூட தெரியாம ஆணிபுடுங்க வச்சிட்டாங்கங்கிறத நெனச்சிகூட வருத்தப்படல கடைசியா வீட்டுக்கு போகும்போது எலேய் உனக்கு பொறந்த நாளாம்ல எனிவே விஷ் யூ காப்பி பெர்த்த்டேன்னுட்டு போனாங்க பாருங்க என் மனசே எரிமலையா பொங்கிடுச்சு அப்புறம் நம்ம பாசக்கார மக்களின் நேத்துல இருந்து வந்த மடல்களை பார்க்க பார்க்க எம்மனசு பனிமலையா குளுந்துருச்சி

(நல்லவேல பாசக்கார பயலுக ட்ரீட் எதுவும் கேக்கல ஏன்னா யாருக்கும் தெரியாதுல்ல :))

அப்படி யாருக்கும் ட்ரீட் வேனும்னு கப்பலோ விமானமோ புடிச்சு கப்பலூருக்கு வந்தியன்னா சேட்டன் கடையில ஒரு கடுங்காப்பியும் அரிசிமுறுக்கும் வாங்கித்தரப்படும்.

பாசக்கார பய

5 comments:

cheena (சீனா) said...

அன்வர் - அன்புடனில் மறு மொழி இட்டு விட்டேன். இருப்பினும் இங்கும் இடுகிறேன்.

அன்வர், இத்தனை ஆர்ப்பாட்டமாக பிறந்த நாள் மதுரையே அதிரும் வண்ணம் நடத்தினாலும்,, இச்சிறப்பு நீ கப்பலூரில் அன்புடன் வாங்கித்தரும் கடுங்காப்பிக்கும் அரிசி முறுக்குக்கும் இணையாகுமா என்ன ?

Unknown said...

anyways belated birthday wishes :) :) :)

Unknown said...

Anyways Belated Birthday Wishes :)

மீறான் அன்வர் said...

வாழ்த்துக்கு நன்றி சீனா ஐயா மற்றும் நிவேதிதா

Natchathraa said...

கடலை முட்டாய் வாங்கி தரமாட்டியாலே....