Thursday, February 7, 2008

திருமங்கலம் 2 தென்காசி

ஒரு வழியா நணபனை நச்சரிச்சி அவன் கேமரா செட்டை வாங்கியாச்சு நடுச்சாமத்துல கெளம்பனும் ஊருக்கு. வழக்கமா ஊருக்கு போகும்போது ரெண்டுமணிவரைக்கும் வரிசையா கேபிள் டீவில படம் பாத்துட்டு அப்படியே கெளம்புவேன். இந்தவாட்டி எந்த வெளிநாட்டுப்்பய செஞ்ச சதியோ தெரியல நாரப்பய கேபிள் கனக்சனை கட்பன்னிட்டானுக சரி இருக்கவே இருக்குன்னு செல்லுல 1:30 மணிக்கு அலாரத்தை வச்சிட்டு கொறட்டை விட ஆரம்பிச்சாச்சு, அதுவும் கடமையா 1:30 மணிக்கு அலருச்சு ஆனா வழக்கமா காலையில 5:00 மணிக்கு அலாரம் வச்சி எந்திச்சிட்டு அந்த காலை குளிருக்கு போத்திக்கிட்டு திருப்பி ஒரு குட்டித்தூக்கம் போடுவேன் அந்த நெனப்புல 1:30க்கு எந்திச்சி திருப்பியும் கொஞ்சம் பெரிய குட்டித்தூக்கமா போட்டுட்டன். காலைல நம்ம பாசக்கார பயலோட கடலச்சத்தம் கேட்டு எந்திச்சுபார்த்தா மணி 5:00 பதரி அடிச்சு பல்கூட வெளக்காம் கெளம்பியாச்சு வழக்கமா கப்பலூர் பாலத்துல போயிதான் பஸ் ஏறுவேன் அன்னிக்குன்னு மகராச்ன் பாலத்துக்கு கீழேயே வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க. திருமங்கலத்துல இறங்கி ஒரு 10 நிமிசம் தென்காசி போய் போகலாமா இல்ல நெல்லை போய் போகலாமான்னு பலமா யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே செங்கோட்டை வண்டி வர ஓடிப்போய் மொத ஆளா ஏறி இடம்பிடிச்சாச்சி அப்புறம் என்னா அங்க தூங்குனது ராசபாளையம் வந்துதான் எழுப்பிவிட்டாங்க அப்புறம்தான் தலைக்குமேல ஒரு பல்பு எரிஞ்சது பையில கேமிரா செட்டு எதுக்கு அநாவசியமா தூங்கிட்டு இருக்குன்னு சும்மா வளைச்சு வளைச்சு எடுக்கலாம்னு போனா நம்ம சீட்டு ஜன்னலோர சீட்டுக்கு அடுத்தசீட்டு ஜன்னலோர சீட்டுல ஒரு சேட்டன் புல்லா ஏத்திக்கிட்டு மல்லாக மலந்து கெடக்காரு சகுனமே சரியில்லையேன்னு பொறுத்துக்கிட்டேன்.

இராசபாளையத்துல ஒரு பெரிய கூட்டமே இறங்க ஒரு வழியா ஒரு வசதியான ஜன்னலோர சீட்டுல இடம் போட்டுட்டு ஒரு டீ சாப்பிடலாம்னு போயிட்டு பல்லு தேய்க்காம டீ சாப்பிடக்கூடாதுன்னு ரென்டு அப்பம் மட்டும் சப்பிட்டுட்டு சீட்டுக்கு வந்தா அங்க் முன்னாடி சீட்டுல உள்ள ஒரு பய முழு கண்ணாடியையும் என் பக்கமா தள்ளிவிட்டுட்டு வேடிக்கை பார்த்திக்கிட்டு இருந்தான் எலேய் கண்ணாடிய அங்கிட்டு நவுட்றா அண்ணே போட்டோ எடுக்கப்போரோம்லன்னு சீன் போடலாம்னுதான் பார்த்தேன் பய கொஞ்சம் வாட்ட் சாட்டமா இருந்தான் மெதுவா காது பக்கத்துல போயி எண்ணே கண்ணாடிய அங்கிட்டு கொஞ்சம் நவுட்டுங்களேன் அப்படின்னேன் ஒரு பார்வை மேலயும் கீழயும் பார்த்துப்புட்டு கொஞ்சமா நவுட்டுனாரு.

அப்பாடான்னுட்டு செட்ட வெளிய எடுத்து படம் காமிக்க ஆரம்பிச்சேன் இல்ல இல்ல படம் பிடிக்க ஆரம்பிச்சேன்.ஓரளவுக்கு வெளிச்சமாத்தான் இருந்துச்சு ராசபாளையம் பஸ் ஸ்டாண்ட விட்டு கெளம்பும் போதுதான் அங்கிட்டு ஷூட்டிங்க் நடக்குற விசயமே தெரிஞ்சுச்சு படம் பிடிக்கிறத படம் பிடிச்சிர்லாம்னு பார்த்தா செட்டுல சிக்கினது கேமிரா முன்னாடி நின்ன கூட்டம் தான் அது இந்த படம்ந்தேன். பசுபதிதான் ஹீரோவாம்.




சரியா பஸ் ஸ்டாண்டுக்கு வெளிய


சரின்னு அப்படியே வாய் பார்த்துக்கிட்டே வந்தேன் ஒரு கோயிலு கண்ணுல பட்டுச்சு பாட்டுனு சுட்டுட்டேன்



சரி கோயில பட பிடிச்சாச்சி அப்படியே ஒரு குளத்தையும் ப்டம் பிடிச்சுட்டமுனா புண்ணியமா போகுமுன்னு கொளத்த தேடிக்கிட்டே வந்ததுல ஒரு கொளம் கெடச்சுது ஆனா அதுல தண்ணி எங்க இருந்துச்சுன்னு தெரியல.




பச்சப்பசேல்ன்னு வயல்வெளி இருக்கும் ஜம்முனு புடிக்கலாமுனு பார்த்தா அங்கிட்டு எல்லாம் கதிர சொமக்க முடியாம அப்படியே என்னோட போட்டோவுக்கு போஸ் குடுக்கமுடியாமையும் தைல் கு்னிஞ்சு நின்னத பார்க்க பரிதாபமாக இருந்தாலும் எதிர்த்த சீட்டுல இருந்த ஒரு சுடியின் ஒரப்பார்வையை ஓரமாக வாங்கிக்கிட்டு இருக்கும்போதே தன்னால பட்டன அழுத்திப்புட்டேன்




அடுத்ததா தேவ தானத்துல ஒரு குட்டித்தேர் எத்தனையோ எடுக்க என்னையும் எடேன்னு வர்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அதையும் அதற்கு முன்பு போஸ் குடுத்தவரையும் சேர்த்து ஷூட் பன்னினது.




பச்சை நிறமே பச்சை நிறமே அப்படின்னு பாடத்தோனுச்சு புடிச்சிட்டேன்



ஒரு பெரிய அழகான வாகை மரம் கொஞ்சம் நெற்பயி ரெண்டு தென்னை மரம் எல்லாத்்தையும் சேர்த்து வச்சு ஒரு பெரும்பாறையின் அடியில் கண்ட காட்சி




நாக்கெல்லாம் இனிக்கிறமாதிரி இருந்துச்சு என்னடான்னு பாத்தா அதான் தரனி சர்க்கரை தொழிற்சாலையாம் சரின்னு அதையும் சுட்டு வச்சுக்கிட்டேன்


வெறும் முகப்பு மட்டும் போதாதுன்னு ஆலையையும் சேத்து புடிச்சாச்சு





நல்ல வேளை எந்த பசுவுமே நான் போட்டா எடுத்தத பாக்கல




கடையநல்லூரின் பிரதான சாலையிலிருந்து ஒரு கிளிக்



கடையநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே வயலுடன் கூடிய சாலை


அன்னிக்கு வேர ஞாயிற்றுக்கிளமையா அதான் ஒரு பேருந்தையும் காணோம் (வெடிகுண்டு புரளியெல்லாம் ஒன்னுமில்லேங்க) தென்காசி பேருந்து நிலையம்.



நாய் குறுக்க வரும்போதே நெனச்சேன் இந்த போட்டா அழகா வரும்னு ஆனா இப்படி பேரழகா வரும்னு நெனைக்கல.



யாருமே இல்லாத பஸ் ஸ்டாண்டுல கடமைக்காகவும் சில ப்ஸ் நிக்கத்தான் செய்யுது.




உள்ள வெங்கலச்சிலையில நிக்கிறது திரு அனந்தராமகிருஷ்ணன் அவர்கள் ஆழ்வார்குறிச்சில நான் படிச்ச பரமகல்யாணி பள்ளியை நிறுவியவர். கூடவே பரமகல்யாணி மருத்துவமனை, கல்லூரி, திருமண மண்டபமும் சேரும்.

ஒரு வழியா ஒரு மொக்கையை பக்காவா பதிஞ்சாச்சி

இப்படி பதிஞ்சிட்டு வெளிய எட்டிபார்த்தா ஒரு பேரிரைச்சல் இருட்டுல ஒன்னும் தெரியல் கொஞ்சம் வெளியே வந்து பார்த்த வானம் பொத்துக்கிட்டு ஊத்துதுங்கோ.என்னே கொடுமைசாமி இது. இதுகே இப்படின்னா அடுத்து வரும்போது ரயிலில் எடுத்த போட்டோவைப்போடும்போது என்ன நடக்குமோ .

பேரன்புடன்
மீறான் அன்வர்

2 comments:

cheena (சீனா) said...

அன்வர், திருமங்கலத்திலிருந்து தென்காசி வரை பேருந்தில் செல்லும் போதெ இவ்வளவு புகைப் படங்களா - அருமை அருமை ( காமெரா நல்லா வேலை செய்யுது - நீ எடுத்தும் படம் நல்லா இருக்குன்னா அதுக்கு காமெரா தான் காரணம்).

ஆமா, எதுத்த சீட்டு சுடிக்காகப் பந்தா பண்ணி படம் காட்டத்தானே இப்படி காமெராவெ பயன் படுத்தினே - உண்மையச் சொல்லு ஆமா

Natchathraa said...

புகைப்படமும் அதற்கு உன்னோட கமெண்ட்ஸ்ஸும் சூப்பரப்பு.....:) :): )