Monday, December 10, 2007

தொலைந்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்

தொலைத்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்

இயற்கையின் பேரழகை
இமைக்காமல் ரசித்த நாட்களை

பார்வையில்கூட கேள்வியையுடன்
பார்க்கும் மழலைகளுடன் மகிழ்ந்த நாட்களை

மழையில் கைநனைத்து
மழலையான நாட்களை

சில்லென சிலிர்க்க வைக்கும்
மலைச்சாரலில் உடல்நனைத்த நாட்களை

பழய கஞ்சியுடன் உரித்த வெங்காயத்தை
மனது நிறைந்த நிம்மதியோடு
வயிறு நிறைத்த நாட்களை

அருவிக்குலியலில் ஆயுளைக்களிக்க......
நினைத்த நாட்களை

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த உலகத்தை
ஜன்னல் உலகில் தேடுகிறேன்,

முகம் தெரியாத நட்புகள்,
உதடு தெரியாத புன்னகைகள்.
நிஜமான நிழலுலகம் இது.

நேரில் எதிர்நோக்கும்
எத்தனையோ கோடி
முகங்களை விட்டு விட்டு

பாரின் எங்கோ ஒரு மூலையில்
மறைந்திருக்கும் முகங்களை
சந்திக்கவே நிந்திக்கிறது மனது......

உள்ளங்கையில் உலகம் வந்தபோது
எதிர்வீட்டு சொந்தங்கள்கூட
அண்டைகிரகவாசிகளாகிவிட்டனர் எனக்கு

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த நிஜ உலகத்தை
இந்த நிழலான ஜன்னல் உலகில் தேடுகிறேன்,

தேடல்களுடன்
மீறான் அன்வர்

4 comments:

cheena (சீனா) said...

அன்வர், கவிதை அருமை - எளிய சொற்களைக் கொண்டு, சிந்தனையோடு படைக்கப்பட்ட அடிகள். நிஜங்கள் உண்மையில் தொலைந்து தான் போய் விட்டன. வாழ்த்துகள்

Unknown said...

உள்ளங்கையில் உலகம் வந்தபோது
எதிர்வீட்டு சொந்தங்கள்கூட
அண்டைகிரகவாசிகளாகிவிட்டனர் எனக்கு

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த நிஜ உலகத்தை
இந்த நிழலான ஜன்னல் உலகில் தேடுகிறேன்,


romba nalla iruku

மீறான் அன்வர் said...

//அன்வர், கவிதை அருமை //

//romba nalla iruku//


ரொம்ப நன்றி சீனா ஐயா மற்றும் நிவேதிதா

Natchathraa said...

ஹம்ம்ம் இது நம்ம அன்புடன் சொந்தங்கள் பத்தின கவியோ....
அழகா உண்மைய எழுதியுருக்கலே....