Saturday, December 1, 2007

சுகமான சோகம்

சொற்களால் முள்ளை
நீ தைத்தபோதெல்லாம்
வலிக்கவில்லை.

மறந்துவிடு என்றபோது
மரத்தேவிட்டது என் மனது

மறந்துதான் போகிறேன் என்னை
உன்னையும் நம் காதலையும்
நினைக்கும்போதெல்லாம்

அட்லாண்டிக் கடலின்
ஆழமென்ன பெண்ணே
உன் ஓரங்குல மனதிற்குமுன்..

உன் நினைவுகளுடன்
கண்மூடித்தனமாக எரியும்
காட்டுத்தீயாய் என் சோகம்

கண்ணாமூச்சி ஆடுகிறாய்
என் பெயருடனான
உன் மழலையோடு.

மனதில் நினைத்த
கனவுகளெல்லாம்
மழையில் கரைகின்றன
மேகங்களாக !

உன் கண்காணா இடம்
தேடி செல்கிறேன்
என்னை நினைக்க.......

2 comments:

cheena (சீனா) said...

அன்வர், காதலி சொன்ன ஒரு சொல்லின் தாக்கம் அழகு தமிழில் அருமைக் கவிதையாய் வடிக்கப் பட்டிருக்கிறது. பாராட்டுகள் நல் வாழ்த்துகள்.

இதுவரை சொன்ன சொற்களை விட கொடுமையான சொல் "மறந்து விடு" என்பது. அவளையும் காதலையும் நினைக்கும் போதெல்லாம் மறந்து விடும் உலகம்.

ஹரிணின்னு ஏன்பா எனக்குப் பெயர் வைத்தீர்கள் ? ( ஒரு பட வசனம்) - இங்கோ :
//என் பெயருடனான
உன் மழலையோடு.//

அருமை அருமை

Natchathraa said...

சம்பன்குளத்தானே கவிதைல கலக்கிட்ட மக்கா.....