Monday, December 10, 2007

தொலைந்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்

தொலைத்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்

இயற்கையின் பேரழகை
இமைக்காமல் ரசித்த நாட்களை

பார்வையில்கூட கேள்வியையுடன்
பார்க்கும் மழலைகளுடன் மகிழ்ந்த நாட்களை

மழையில் கைநனைத்து
மழலையான நாட்களை

சில்லென சிலிர்க்க வைக்கும்
மலைச்சாரலில் உடல்நனைத்த நாட்களை

பழய கஞ்சியுடன் உரித்த வெங்காயத்தை
மனது நிறைந்த நிம்மதியோடு
வயிறு நிறைத்த நாட்களை

அருவிக்குலியலில் ஆயுளைக்களிக்க......
நினைத்த நாட்களை

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த உலகத்தை
ஜன்னல் உலகில் தேடுகிறேன்,

முகம் தெரியாத நட்புகள்,
உதடு தெரியாத புன்னகைகள்.
நிஜமான நிழலுலகம் இது.

நேரில் எதிர்நோக்கும்
எத்தனையோ கோடி
முகங்களை விட்டு விட்டு

பாரின் எங்கோ ஒரு மூலையில்
மறைந்திருக்கும் முகங்களை
சந்திக்கவே நிந்திக்கிறது மனது......

உள்ளங்கையில் உலகம் வந்தபோது
எதிர்வீட்டு சொந்தங்கள்கூட
அண்டைகிரகவாசிகளாகிவிட்டனர் எனக்கு

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த நிஜ உலகத்தை
இந்த நிழலான ஜன்னல் உலகில் தேடுகிறேன்,

தேடல்களுடன்
மீறான் அன்வர்

Friday, December 7, 2007

சோதனைப்பதிவு

சாதனைகள் சில சாதாரணமாக வருவதில்லை
பல சோதனைகளுக்குப்பின்னும் வரலாம்.

தமிழ்மணத்தில் இணைந்த்பின் என் முதல் இடுகையிது

உங்கள் வாழ்த்துச்சாலையில்
தன் வலைப்பயணத்தை தொடங்க
தவழ்ந்து நிற்்கிறது இந்த குழந்தை.

புன்னகையுடன்
மீறான் அன்வர்

Saturday, December 1, 2007

சுகமான சோகம்

சொற்களால் முள்ளை
நீ தைத்தபோதெல்லாம்
வலிக்கவில்லை.

மறந்துவிடு என்றபோது
மரத்தேவிட்டது என் மனது

மறந்துதான் போகிறேன் என்னை
உன்னையும் நம் காதலையும்
நினைக்கும்போதெல்லாம்

அட்லாண்டிக் கடலின்
ஆழமென்ன பெண்ணே
உன் ஓரங்குல மனதிற்குமுன்..

உன் நினைவுகளுடன்
கண்மூடித்தனமாக எரியும்
காட்டுத்தீயாய் என் சோகம்

கண்ணாமூச்சி ஆடுகிறாய்
என் பெயருடனான
உன் மழலையோடு.

மனதில் நினைத்த
கனவுகளெல்லாம்
மழையில் கரைகின்றன
மேகங்களாக !

உன் கண்காணா இடம்
தேடி செல்கிறேன்
என்னை நினைக்க.......

Sunday, August 26, 2007

சம்பன்குளம்

Photobucket Album

Wednesday, May 16, 2007

பொழுதுபோக்காக......

இருட்டில் ஒரு வெளிச்சம் !


Tuesday, May 1, 2007

இயற்கையின் குழந்தை - கடனாநதி

கடனா நதி அனைக்கட்டு

சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊர போலாகுமா !



நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் ஒன்றியத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த கடனா நதி அணைக்கட்டு நெல்லைமாவட்டத்தில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு அணைக்கட்டுகளுக்கு அடுத்த பெரிய அணைக்கட்டு இதுவாகும்.






அகத்திய மலைக்கும்(பாபநாசம்) குறவஞ்சி(குற்றாலம்) மலைக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டிற்கு தோணியாறு(பனிச்சி), கல்லாறு(பாம்பாறு, நெடும்பாறை) என்ற இரு நீர்வீழ்ச்சிகள் வழியாக நீர் கிடைக்கிறது.


85 அடிகள் கொண்ட இந்த அணைக்கட்டு தற்போது பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏழு மதகுகளைக்கொண்டது. சுற்றுவட்டார விளைநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த அணைக்கட்டு உள்ளது. தமிழக முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களால் 1969 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.


அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து உள்ளே சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அணைக்கட்டின் அடிவாரத்தில் தொடக்கத்தில் கட்டப்பட்ட பூங்கா சீரமைப்பின்றி பொலிவின்றி இருக்கிறது. இப்பூங்கா சீரமைக்கப்படும் பட்சத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கும்.


இது வெளி அமைப்பு மட்டுமே உள்ளே அருவிகளுடன் நதிகளுடன் எடுக்கப்பட்ட நிழற்படங்களுடன் விரைவில் வருகிறேன்.

சம்பன்குளத்தான்
மீறான் அன்வர்